பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் தன் சொத்துக்கள் முழுவதையும் தன் மகன் மகளுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் நடித்து பல கோடிகள் சம்பளமாக பெற்றுவருகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது தெரியவந்த்துள்ளது.