விற்பனை உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்ட 2 கடைகளை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் வட்டாரத்தில் அமைந்திருக்கும் உர விற்பனை நிலையங்களில் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் திடீரென ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது 2 உரக்கடைகள் விற்பனை உரிமம் புதுப்பிக்காமல் உரங்களின் விற்பனை விலைப்பட்டியலை முறையாக பராமரிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்த 2 உர கடைகளிலும் உர விற்பனைகள் நடைபெற இயலாதவாறு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள மானிய விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விலைப்பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்பின் விற்பனை முறையை கருவியின் மூலம் விவசாயிகளின் ஆதார் எண்ணை பெற்று அதன் பிறகு உர விற்பனை செய்ய வேண்டு என கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் உர விற்பனைகள் செய்யும் நிலையங்கள் உரிமத்தை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.