தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை நடிகர் விஜய்சேதுபதி சந்தித்து பேசினார். அப்போது சினிமா துறை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.