அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேவையின்றி சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 153 நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதைப்போல் பொது இடங்களில் சமூக இடைவெளியின்றி செயல்பட்ட 11 நபர்களுக்கு 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஊரடங்கு விதிமுறைகளை மீறியது குறித்து 164 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் கொரானா கட்டுப்பாடு விதிகளை மீறி அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த நபர்களின் 58 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.