சர்வதேச விண்வெளி மையத்தில், 6 வருடங்களாக எலிகளுடைய விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், அதிலிருந்து 168 குட்டிகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருக்கும் யாமானாஷி என்ற பல்கலைகழகத்தில் பணியாற்றும் டெருஹிகோ வாகயாமா என்ற முதன்மை ஆசிரியர் தலைமையில் ஆய்வாளர்களின் குழுவானது, கடந்த 2013 ஆம் வருடத்தில் எலிகளுடைய உறைந்த மற்றும் உலர்ந்துபோன விந்தணுக்களை அதிக நாட்கள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது.
விண்வெளியில் இருக்கும் கதிர்வீச்சுகளால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் உண்டாகுமா?மற்றும் விந்தணுக்களால் உருவாகக்கூடிய உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாகுமா? என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் ஆறு வருடங்களுக்கு பின்பு அவை பூமிக்கு திரும்பியுள்ளது.
நீரிழப்பு செய்யப்பட்டதால், அதிலிருந்து 168 குட்டிகள் பிறந்திருக்கிறது. குட்டிகள் எதற்கும் விண்வெளியின் அதிக கதிர்வீச்சு காரணமாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து டெருஹிகோ வாகயாமா தெரிவித்துள்ளதாவது, விண்வெளிக்கு சோதனைக்காக அனுப்பப்பட்ட விந்தணுக்கள் மூலமாக பிறந்த எலிகள், இங்குள்ள சாதாரண எலிகள் போன்று தான் உள்ளது.
அவற்றிற்கென்று தனி வித்தியாசமும் எதுவும் இல்லை. விண்வெளி சுற்றுப் பாதையில் உலர்ந்து போன விந்தணுக்களை சுமார் 200 வருடங்கள் வரை சேகரிக்கலாம். மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, பெண் சினை முட்டைகளையும், கருக்களையும் அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியிருக்கிறார்.