நாமக்கல் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதிக வாகனங்கள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், வேளாண் உபகரணங்கள், வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் உள்ளிட்ட சில கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கும் இ-பதிவுடன் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் வாகனங்கள் இயங்குகின்றது. இதனைத்தொடர்ந்து வழக்கத்தை விட அதிக ஆட்டோக்களும், வாகனங்களும் இயங்குவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.