டெல்லியில் இந்திய மக்கள் FITNESS ஆக இருக்கவேண்டுமென இந்திய உடற்தகுதி இயக்கம் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று இந்திய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இவ்வாண்டு வெகு விமர்சையாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் FITNESS உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் FITNESS CHALLANGE ஒன்றை பிரதமர் மோடி மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அது வைரலாகி பலரிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அனைவரும் உடல் பலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் மைதானத்தில் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்காகவும் இந்திய விளையாட்டு தினத்தையொட்டி டெல்லியில் இன்று இந்திரா காந்தி ஸ்டேடியம் இல் புதிய இயக்கம் தொடங்கப்பட்டது.
இதற்கு இந்திய உடற்தகுதி இயக்கம் என்றும் பெயரிடப்பட்டது. இவ்வியக்கத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தற்பொழுது ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாக உடல் பலத்தை பேணி பாதுகாக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பிரதமர் மோடி கண்டு கழித்து வருகிறார்.