Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றியவாறு… பாடப்பிரிவில் கேட்கப்படும் கேள்வி… ஆர்வமுடன் செல்லும் மாணவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அரசு உத்தரவின்படி பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து கல்விக்கூடங்கள் திறக்கப்படவில்லை. அப்போது கல்வியானது ஆன்லைன், வாட்ஸ்அப், கல்வி தொலைக்காட்சி போன்ற செயலிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கல்விக் கூடங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம் என அறிவுறுத்தியது. இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 9ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் அதில் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட பாடப்பிரிவை கேட்ட மாணவர்களிடம் ஆசிரியர் குழுவினர் பாடப்பிரிவு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு சேர்த்துள்ளனர். இவ்வாறாக மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகின்றனர்.

Categories

Tech |