Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : வெற்றி பெறும் அணிக்கு இவ்ளோ கோடியா ….? பரிசு தொகையை அறிவித்த ஐசிசி …!!!

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றி பெறும் அணிக்கான  பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது . 

ஐசிசி  நடைமுறைப்படுத்திய  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொரடானது கடந்த 2019 முதல் 2021 வரை நடந்த வந்தது . இந்த  டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீச்சை நடத்த வேண்டும் .இதில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 18 ம் தேதி சவுதாம்ப்டனில் நடக்கும் உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் இறுதிப் போட்டிக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் ,அதாவது இந்திய மதிப்பில் 11 கோடியே 71 லட்சத்து 66 ஆயிரத்து 960 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் ,தோல்வியடைந்த அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 5,85,83,480 ரூபாய் பரிசாக வழங்கப்படும். ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் மொத்தப் பரிசுத் தொகையும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.இந்த தகவலை ஐசிசி சிஇஓ ஜெஃப் அலார்டைஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |