மதுகடைகளில் கூட்டமாக கூடும் மது பிரியர்களை காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதுமாக கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 மதுகடைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள பொன்னகரம், பாப்பிரெட்டிபட்டி, காரியமங்கலம், அரூர், நல்லம்பள்ளி ஆகிய 57 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் மதுபான கடைகளில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளான சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக தரைப்பகுதியில் இடைவெளியுடன் கூடிய வட்டங்கள் வரைந்து பொதுமக்களை நிற்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் தான் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் பொதுமக்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் காவல்துறையினர் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மது பிரியர்களை ஒழுங்கு படுத்தி வருகின்றனர்.