Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று…. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி, அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் DYFI இணைந்து இந்த முகாமை நடத்துகின்றனர். மாற்றுத்திறனுடைய அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |