Categories
தேசிய செய்திகள்

“4 பேர் இறந்ததற்கு அவர்கள் தான் காரணம்”… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… ஜார்கண்டில் சோக சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் என்ற மாவட்டத்தில் பிப்லா அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் சிலர் மாடு மேய்த்து வருகின்றனர். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 65 வயதான மூதாட்டி, 3 வயது சிறுவர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 4 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர்களில் இருவர் சகோதரர்கள் ஆவார்கள்.

இதில் ஒரு மாடும் உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோபம் அடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பாலடைந்த மின்கம்பிகளை சரி செய்யும் போது பலமுறை மின்வாரியத்திற்கு புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இதற்கு அவர்களே காரணம் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

Categories

Tech |