தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்ததினால் மது வாங்குபவர்கள் கடைகளில் அலை மோதி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சனி சந்தை, மானியத அள்ளி மற்றும் உம்மியம் பட்டி உள்ளிட்ட 13 கிராமப்புறங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்ட பகுதிகளில் மதுபான கடை திறக்கப்படாத காரணத்தினால் அங்கிருந்து அதிகமான மதுபான விரும்பிகள் இங்கே திரண்டு வருகின்றனர்.
இதனால் மது வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு நின்றதை காண முடிகிறது. அதன் பின் காவல்துறையினர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மதுபான விரும்பிகளை கண்டித்து ஒழுங்காக நிற்கச் செய்து மது வாங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் 3 மது கடைகளிலும் மதுபான விரும்பிகள் அதிகமானோர் வந்ததால் அந்த கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவக்கூடும் என கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினரிடன் தெரிவித்துள்ளனர்.