கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 194 மது பாட்டில்கள் மற்றும் 1,50,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மது பாட்டில்களை சேலம் மாவட்டத்தில் இருக்கும் சிக்கனம்பட்டி கிராமத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன்பின் காவல்துறையினர் வேன் டிரைவர் வெங்கடேஷ் என்பவரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அவர் கூறியது, கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த விஜய் என்பவரின் வீட்டின் பின்புறம் வைத்து விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் விஜயின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு 194 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினரே பார்த்ததும் விஜய் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெங்கடேஷிடம் இருந்த வேன், 194 மது பாட்டில்கள் மற்றும் 1,50,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய விஜயை தீவிரமாக தேடி வருகின்றனர்.