ஆஸ்திரேலிய நாட்டை நாசம் செய்து வரும் பல மில்லியன் எலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டையே பல மில்லியன் எலிகள் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய கண்களை ஏதோ ஒன்று கடிப்பது போல் உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண் பதறிப்போய் எழுந்து பார்த்தால், எலி ஒன்று தன்னுடைய கண்ணை கடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் அந்தப் பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் விவசாயியான Mick என்பவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய முகத்தின் மீது ஏதோ ஒன்று நடப்பதுபோல் உணர்ந்திருக்கிறார். அதன்பின் விவசாயி விழித்து பார்த்தால் ஒரு எலி Mick கின் முகத்தின் மீது ஏறிச் அவருடைய மனைவியின் விரலை கடிப்பதற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டையே துவம்சம் செய்து வரும் எலியின் தொல்லையை தேசிய பேரழிவாக அறிவிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த எலி தொல்லைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க இதுவரை தடை செய்யப்பட்ட எலி விஷத்தை அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கி எலிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முடிவு செய்துள்ளது.