வன பகுதியில் வாழும் குரங்குகளுக்கு சாப்பாடு தடை இன்றி வழங்குமாறு சமூக ஆர்வலர்களிடம் வனத்துறையினர் கோரிக்கை செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு செல்லும் சாலை பகுதியில் பொய்யபட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதி வழியாக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பிஸ்கட், தின்பண்டங்கள் மற்றும் பழம் ஆகிய பொருட்களை குரங்குகளுக்கு போட்டு செல்கின்றனர்.
ஆனால் முழு ஊரடங்கு என்பதால் வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் வனபகுதிக்கு செல்லும் வழி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வனப்பகுதியில் வாழ்கின்ற குரங்குகள் உணவு கிடைக்காமல் பசியால் வாடி வருகின்றது. இதனைத்தொடர்ந்து பசியால் வாடுகின்றனர் குரங்குகளுக்கு வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.