Categories
உலக செய்திகள்

“பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்கள்!”.. சுவரில் எழுதப்பட்டிருந்த வாக்கியம்.. அதிர்ந்துபோன காவல்துறையினர்..!!

பிரிட்டனில் வீட்டில் பழுது பார்க்கும் பணிக்கு வந்த நபர் பெண் மருத்துவரையும், அவரின்  மகளையும் கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்பியுள்ளார். 

பிரிட்டனில் வசிக்கும் சமன் மீர் சச்சார்வி என்பவர் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக உள்ளார். இவர் தினசரி பாகிஸ்தானில் இருக்கும் தன் தாயிடம் தொலைபேசியில் பேசுவது வழக்கம். ஆனால் தன் மகளிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வராததால், அவரின் தாயார் அங்கு வசிக்கும் ஒரு நண்பரை தொடர்புகொண்டுள்ளார்.

அந்த நண்பர், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அதிகாரிகள்  அவரின் வீட்டினுள் சென்று பார்த்தபோது மருத்துவரும், அவரின் 14 வயது மகளும் பாதி உடல் எரிந்தபடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வீட்டின் சுவரில் “இது கொரோனாவின் வீடு, என் தாய் கொடுமையானவள், எனக்கு உதவுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

எனவே காவல்துறையினர், தாய், மகள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன் மகளை கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதினர். ஆனால் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது மருத்துவர், கழுத்து  நெரிக்கப்பட்டும், அவரது மகள் தலையணையால் அழுத்தப்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

எனவே வேறு ஒரு நபர் தான் அவர்களை கொலை செய்திருப்பார் என்று காவல்துறையினர் வீட்டை சோதித்தபோது, இரண்டு மது பாட்டில்களும் ஐஸ்கிரீம் கப்களும் கிடந்துள்ளது. Shahbaz Khan என்ற கட்டிட பணிகளை செய்யும் நபர் அந்த பொருட்களை வாங்கியது கண்டறியப்பட்டது. மேலும் இவர் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியன்று, அந்த மருத்துவரின் வீட்டில் பழுது பார்க்க சென்றிருக்கிறார்.

அக்டோபர் 1-ஆம் தேதியன்று அவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Khan ஒருவரிடம் மருத்துவரின் வீட்டிற்கு சென்று பல நாட்களானதாக கூறியிருக்கிறார். எனவே காவல்துறையினர், அவர் மீது சந்தேகமடைந்து, அவரின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நகை மற்றும் பல பவுண்டுகள் பணம் இருந்துள்ளது.

Khan, மருத்துவர் மற்றும் அவரின் மகளை கொலை செய்துவிட்டு, மகள் மீது பழியை போடுவதற்காக சுவரில் “இது கொரோனா வீடு, என் தாய் கொடுமையானவள், எனக்கு உதவுங்கள்” என்று அவரே எழுதியிருக்கிறார். அவரை கைது செய்த காவல்துறையினர் பொய்யாக சாட்சி கூறிய அவரின் மனைவியிடமும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Categories

Tech |