மாம்பழங்களின் விற்பனை வீழ்ச்சியால் அரசிடம் விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்துரன அல்லி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, ஜிட்டாண்ட அள்ளி, அண்ணாமலை அல்லி போன்ற பகுதிகளில் அதிகளவில் மாம்பழம் உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் உற்பத்தியாகும் மாம்பழங்களளை வெள்ளிச்சந்தை, காரியமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் மாங்கூள் தொழிற்சாலைகள் மற்றும் மாங்காய் மண்டிகள் ஆகிய நிறுவனங்களுக்கு மா விவசாயிகள் விற்கிறன்றனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணத்தினால் சில மாம்பழம் தொழிற்சாலைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மாங்காய் மண்டி மூடப் பட்டிருப்பதால் மாம்பழங்களுக்கு உரிய விலைகள் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மா விவசாயிகள் கூறும்போது, தற்போது பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் மாம்பழங்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்ற நிலையில் ஊரடங்கின் காரணத்தால் மா மண்டிகள் திறக்காததால் மாம்பழங்களின் விலையானது பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாங்கூள் தயாரிக்கும் நிறுவனங்கள் மிக குறைவான விலைக்கே மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் மாம்பழத்தை டன் ஒன்றுக்கு 25 ரூபாய் விலை நிர்ணயம் செய்து தருமாறு விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.