குஜராத்தில் பெற்ற மகளை தந்தை கற்பழித்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிசோஹிர் என்ற நகரில் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகளான 19 வயதுடைய இந்த பெண் மட்டும் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமாகாத அந்தப் பெண்ணிடம் இதுகுறித்து விசாரணை செய்த போது, அப்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் தனது தந்தை, தனது தாய் இல்லாத நேரத்தில் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் கர்ப்பம் ஆகியுள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்படும்போது, குழந்தை பிறந்தவுடன் இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.