தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அய்வத்தான்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சின்னம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பழனியப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்தவித பலனும் இல்லை.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.