ராணுவத்தின் கூட்டுப்படைகளின் மூலம் சீனாவின் செல்வாக்கால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரேசில் நாட்டில் நோட்டா நாடுகளின் மாநாடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு பின்பு, ராணுவ கூட்டுப் படையின் மூலமாக சீனாவின் பெரும் செல்வாக்கால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சீன நாடு அதனுடைய சர்வதேச அளவிலான கடமைகளை நிறைவேற்றுவதற்கேற்ப செயல்படுமாறு நோட்டோவின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து இந்த மாநாட்டில் நோட்டோவின் தலைவர்கள் சீனா மற்றும் ரஷ்யாவின் மூலம் வளர்ந்து வரும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சமாளிப்பதற்கு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சீன நாடு உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறுவதை நோட்டோ தலைவர்கள் நிறுத்த வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் சீன பணிக்குழு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.