Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற அவர்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 55 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ய முடியும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Categories

Tech |