Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா அமையல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் சிவரஞ்சனி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்தளம்பட்டி பகுதியில் வசிக்கும் தர்மன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனி அப்பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் சிவரஞ்சினியின் தாயார் காந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |