மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மா பழம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதாவிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தனது தாய் வீட்டிற்கு வந்த செல்வ அஜிதா சமையல் செய்வதற்காக மொட்டை மாடியில் முருங்கைக்காயை பறிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது செல்வ அஜிதா எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வ அஜிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.