ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார். வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ப.சிதம்பரத்துக்கு நாளை வரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை செய்யலாம் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சிதம்பரம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு உட்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட நிலையில்தான் அமலாக்கத்துறை வழக்கின் விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்று வருகின்றது.