தடுப்பணையில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி மலை செல்லும் சாலை ஓரத்தில் ஒரு பள்ளம் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தின் இரு பகுதிகளிலும் 15 அடி ஆழம் கொண்ட தடுப்பணைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் இந்த தடுப்பணையில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே தடுப்பணையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.