பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அங்கு குவிந்து விட்டனர்.
இதனையடுத்து மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.