விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 90% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா காரணமாக தமிழக அரசு கடந்த சில வாரங்கள் முன்பு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வருமானமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை கடந்த 7ஆம் தேதி அமல்படுத்தியுள்ள நிலையில் 30 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளில் பட்டாசு ஆலைகளில் 90% பணியாளர்களுடன் செயல்படலாம் என அறிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.