Categories
மாநில செய்திகள்

போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும். உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் வழங்க வேண்டும். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏழு இலக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற, ஊரகப் பகுதி காலிப் பணியிடங்களை தகுதியான நபர்கள் கொண்டு நிரப்பிட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைகுமாறு ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |