திருமணமாகிய 8 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் தினேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து 8 மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்து வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெண்ணிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருமணமாகி 8 மாதத்திற்குள்ளேயே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ ராஜலட்சுமி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த விசாரணையின் பிறகு தான் இளம்பெண் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.