மேய்ச்சலில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூத்திரம் பாக்கம் பகுதியில் வசிக்கும் முருகன், நடராஜன், வேணுகோபால் ஆகிய 3 பேருக்கும் சொந்தமான மூன்று பசு மாடுகள் வயல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து பசு மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி அதே பகுதியில் வசிக்கும் வரத்தம்மாள் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சென்னை பகுதியைச் சேர்ந்த தனோஜ்குமார் என்பவருடன் இணைந்து 3 பசு மாடுகளை லாரியின் மூலமாக கடத்தி சென்று வேலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவரிடம் விற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் வேலூருக்கு சென்று செல்வராஜிடம் இருந்து 1,15,000 மதிப்புடைய 3 பசுமாடுகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வரத்தம்மாள், செல்வராஜ், தனோஜ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்த லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.