சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 11 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.