உத்திரப்பிரதேச மாநிலத்தில், ராணுவ வீரர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறிய இளம் பெண்ணை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜெகன்நாத் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். அதை தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் ராணுவ வீரர் பிரகாஷ் வீட்டில் அவரது பெற்றோர்கள் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளனர். இதை அறிந்த அந்த பெண் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் என்ன செய்வது என்று அறியாமல் காவல்நிலையத்தில் ராணுவ வீரர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ராணுவ வீரர் ஒப்புக்கொண்டார். பின்னர் இதுவரை அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் அவர் ஏமாற்றி வருவதாக, மீண்டும் அந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.