திரிஷா, ஹன்சிகா போன்ற முண்ணனி நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெப் தொடர்களும் திரைப்படங்களைப் போல காதல், ஆக்ஷன், மர்மம் என ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடர் வெளியாகியிருந்தது. திரைப்படங்களில் நடிக்க ரூ.1.5 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா இந்த வெப் தொடரில் நடிக்க ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அடுத்ததாக சமந்தா நடிக்கும் வெப் தொடருக்காக அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக சம்பளம் காரணமாக பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காஜல் அகர்வால், நித்யா மேனன், மீனா, தமன்னா உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். தற்போது திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.