புதிதாக துணை காவல்துறை சூப்பிரண்டகாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜலட்சுமி பதவி ஏற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் துணை காவல்துறை சூப்பிரண்டு ராமநாதன் காத்திருப்போர் பட்டியல் வரிசையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பதிலாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி அடைந்து சென்ற ஒரு வருடமாக கடலூரில் துணை சூப்பிரண்டு பயிற்சி பெற்ற ராஜலட்சுமியை கள்ளக்குறிச்சி துணை காவல்துறை சூப்பிரண்டாக நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள துணை காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜலட்சுமி பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற காவல்துறை அதிகாரிகள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்பின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறை நல்ல அணுகுமுறையுடன் நடந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என துணை காவல்துறை சூப்பிரண்டு ராஜலட்சுமி கூறியுள்ளார். பின்னர் பொதுமக்கள் அளிக்க வரும் புகார்கள் அனைத்தும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு 8220605577 அழைத்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என துணை காவல் துறை சூப்பிரண்டு ராஜலட்சுமி கூறியுள்ளார்.