தென் கொரிய நாட்டின் கலாச்சாரங்களை கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். இவர் தன் நாட்டு மக்களிடம் தென் கொரியாவின் பாடல்களையோ, நாடகங்களையோ பார்த்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார். மேலும் இதனை மீறினால் 15 வருடங்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் கடுமையான தண்டனையும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கே.பாப் என்னும் தென்கொரிய பாடகர், வட கொரிய நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். இதனால் கோபமடைந்த கிம் ஜாங் உன் தன் நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க பொதுமக்களுக்கு தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது தென் கொரிய நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடிக்க நினைத்தால் மரணதண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தென்கொரிய நாட்டின் பாடகரான கே.பாப் என்பவரை தன் நாட்டின் கலாச்சாரத்தை அளிப்பதற்காக வந்த “புற்றுநோய்” இவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.