Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போனவனை காணவில்லை… இது தான் நடந்துச்சு… கைது செய்த காவல்துறையினர்…!!

வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலந்தல் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனது கரும்பு வயலுக்கு சென்று உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் தனது மரவள்ளிக்கிழங்கு வயலில் அமைத்திருந்த மின்வேலியில் காசிநாதன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காவல்துறையினரிடம் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் காசிநாதனின் உடலை தூக்கி அவரது கரும்பு வயலில் வீசியுள்ளார்.

அதன் பின் நடந்த சம்பவத்தை மறைப்பதற்கு முடிவு செய்த பாஸ்கர், காசிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவாறு  உடல் மற்றும் வாயில் விஷத்தை ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற காசிநாதன் நீண்ட நேரம் ஆன பின்பும் திரும்பி வராததால் உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். இதனையடுத்து அச்சமடைந்த பாஸ்கர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்து நடந்த சம்பவத்தை பற்றி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திருக்கோவிலூர் காவல் துறையினர் மற்றும் காசிநாதன் உறவினர்கள் அவர் இறந்து கிடப்பதாக கூறிய கரும்பு தோட்டத்திற்கு சென்று உள்ளனர்.

அப்போது காசிநாதனின் உடலை பார்த்த அவரின் தந்தை சுப்பிரமணியன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் காசிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மாரடைப்பால் இறந்து போன சுப்பிரமணியனின் உடலை அவரின் உறவினர்களிடம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |