சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாற்றுத் திறனாளிகள் எங்களுக்கான வேலைவாய்ப்பு , இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் சென்னை எழிலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதில் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தி முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளி நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டுமென்று முழக்ககங்களை முழங்கினார். போராட்டம் நடத்தியவர்களிடம் துணை ஆணையர் சுதாகர் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்கார்கள் உடன்படாத காரணத்தால் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர்.