நெல்லையில் நேற்று உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தான முகமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்துள்ளார்.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லையில் ரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இந்த முகாம் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ரத்த தானம் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ரத்த தான தினத்தில் சுகாதார துறையினர் சார்பில் ஒரு வாசகங்கள் அறிவிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு “உதிரத்தை கொடுத்து உலகத்தை துடிப்புடன் வைத்திருப்போம்” என அறிவித்துள்ளனர். மேலும் இந்த தினத்தில் அதிக ரத்த தானம் செய்பவர்களை ரத்த கொடையாளர்களாக கவுரவிக்கப்படும். இந்நிலையில் இளைஞர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் மணிமாலா, ரத்த வங்கி அலுவலர் டாக்டர் ரவி சங்கர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் குமார் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.