ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஜவுளி மற்றும் மூன்று நகை கடைகளை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
இதனையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள வரைக்கும் அத்தியாவசியத் தேவை இன்றி இருக்கும் கடைகளை திறக்கக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.