Categories
உலக செய்திகள்

சீன அணுமின் நிலையத்தில் பிரச்சனை.. பிரான்ஸ் நிறுவனம் புகார்..!!

சீனாவின் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் தைஸான் என்னும் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டது. பிரான்சின் பிரமாடோம் நிறுவனமும் இதற்கு உதவி செய்கிறது. இந்நிலையில் இந்நிறுவனமானது, இந்த அணுமின் நிலையத்தில் உருவாகியுள்ள கசிவால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

எனினும் இது குறித்து சீனா எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் பிரான்ஸ் நிறுவனமானது கதிர்வீச்சு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும் ஜோ பைடன் அரசு சீனாவின் அணுமின் நிலையத்தால் அங்கு பணியாற்றுபவர்களுக்கு மக்களுக்கும் தற்போது எந்தவித ஆபத்தும் இல்லை என்று நம்பி வருகிறது.

அதே சமயத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலானது, பலதடவை இது தொடர்பில் ஆலோசனை நடத்துகிறது. மட்டுமல்லாமல் பிரான்ஸ் அரசு மற்றும் எரிசக்தி துறை நிபுணர்கள் போன்றோருடன் ஜோபைடன் அரசு ஆலோசனை நடத்துகிறது.

சீனாவுடனும் ஆலோசிக்கப்படுகிறது. தற்போது வரை தங்கள் அணுமின் நிலையத்தில் பிரச்சனை உருவானதாக சீன அரசு எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் பிற நாட்டு நிறுவனம் அமெரிக்க அரசிடம் உதவியை நாடியிருப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |