தடையை மீறி திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மருத்துவமனை சாலை கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஒரு ஜெராக்ஸ் கடை திறந்திருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து கடையை மூடுமாறு தெரிவித்தபோது கடை உரிமையாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜெராக்ஸ் கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.