விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் வனிதா, நிஷா, ஜூலி, சம்யுக்தா, கேபி, ஆஜித், ஷிவானி, சோம் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.
Back to #bbjodigal set…shoot going on with all safety protocols being followed #staysafe #wearamask @vijaytelevision pic.twitter.com/bxytTQ1RbG
— Ramya Krishnan (@meramyakrishnan) June 15, 2021
கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு நெறி முறைகளுடன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.