Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை தொடங்கியது.
Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கியது. Flipkart நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனை என்றும் ,Amazon நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனை என்றும் நடத்தி வருகிறது. இந்த விற்பனைகள் மூலம் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி மற்றும் சலுகையில் வழங்கிவருகிறது.
Flipkart-ல் நடைபெறும் தள்ளுபடி விற்பனை இம்மாதம் 31-ம் தேதி வரையும், Amazon-ன் விற்பனை இம்மாதம் 30-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு விற்பனைகள் மூலம் சாம்சங் கேலக்சி M30 (Samsung Galaxy M30), ஹானர் ப்ளே (Honor Play) விவோ Z1 Pro (Vivo Z1 Pro) சியோமி ‘Mi A2’ (Xiaomi ‘Mi A2’) உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் பயனாளர்கள் பெற முடியும்.