Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இப்போது இல்லை என்றால் எப்போது?’… நடிகை ராஷி கண்ணாவின் செயலுக்கு குவியும் பாராட்டு…!!!

நடிகை ராஷி கண்ணா சாலையோரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் . தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை-3, மேதாவி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

https://twitter.com/RaashiiKhanna_/status/1404731998640361477

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா சாலையோரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம்மை விட்டால் வேறு யாரு, இப்போது இல்லை என்றால் எப்போது?. நன்கொடையளிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் ஒவ்வொரு நாளும் 1,200 பேருக்கு ரொட்டி வாங்கி உணவளிக்க உதவியுள்ளது. தொடர்ந்து ஆதரவளிக்கவும்’ என பதிவிட்டுள்ளார். நடிகை ராஷி கண்ணாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |