அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , ரஷ்ய ஜனாதிபதியுடனான முக்கியமான சந்திப்பிற்காக சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக வந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு விமானமானது சுவிட்சர்லாந்துக்கு உள்ளூர் நேரப்படி 4.22 மணிக்கு வந்து இறங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹெலிகாப்டர் மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜூன் 16-ஆம் தேதி ஜெனீவா நகரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு ஜனாதிபதிகளும் சந்திக்க உள்ள Villa La Grange வளாகத்தை சுற்றிலும் காவல்துறையினர் அதிரடியாக குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.