சிம்மம் ராசி அன்பர்களே..!
முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும்.
புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். விரிவாக்கம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். கேட்ட இடத்திலெல்லாம் பண உதவிகள் கிடைக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிணைப்பு உண்டாகும்.
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். நல்ல செய்திகள் வந்துச்சேரும். மாணவர்கள் விளையாடும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.