கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் 150 என பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருந்தது. அரசுக்கு குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது. இதையடுத்து பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசிற்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்குவதால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் இவ்வாறு வழங்க முடியாது. உற்பத்தி திறன் பாதிப்பை சரி கட்டுவதற்காக தனியார் சந்தையில் விலையை உயர்த்தி வழங்குகிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.