சிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க நாட்டில் மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.