மீனம் ராசி அன்பர்களே.! தெளிவு இருக்கும்.
இன்று புதிய கலை பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவீர்கள். உங்களுடைய அணுகுமுறையில் ஒரு நல்ல மாற்றம் இருக்கும். சிந்தனையில் நல்ல தெளிவு இருக்கும். சாதுர்யமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். சம்பாத்தியமும் உயரும். சேமிக்கக்கூடிய எண்ணங்களும் இருக்கின்றது. வியாபாரம் மூலமாக வரவு திருப்திகரமாக இருக்கும். சவால்களை திறமையாக எதிர்கொள்வீர்கள். மாமன் மைத்துனன் வகையில் உதவிகளை பெற முடியும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் சரியாகிவிடும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். நல்ல வரன்களை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கைத்துணையுடன் அன்பை வெளிப்படுத்துவார்கள். வாகனத்தில் பொறுமையாக செல்ல வேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். காதல் இனிமையாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மன வருத்தத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு